மொழி படம் பாஸ்கார் மாதிரி சொன்னேன்; பெரிய ஆளா வருவான் - சாய் சுதர்சனுக்கு பிரபல வீரர் பாராட்டு!

Ravichandran Ashwin Cricket Tamil nadu Indian Cricket Team Sai Sudharsan
By Jiyath Dec 18, 2023 05:03 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அறிமுக வீரர் சாய் சுதர்சனை பாராட்டியுள்ளார்.

சாய் சுதர்சன் 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த 'சாய் சுதர்சன்' சதம் அடித்து அசத்தினார்.

மொழி படம் பாஸ்கார் மாதிரி சொன்னேன்; பெரிய ஆளா வருவான் - சாய் சுதர்சனுக்கு பிரபல வீரர் பாராட்டு! | Ravichandran Ashwin Has Praised Sai Sudarshan

இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 4வது இந்திய தொடக்க வீரர் மற்றும் 17வது இந்தியர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் "மொழி திரைப்படத்தில் எவ்வாறு எம்எஸ் பாஸ்கர் (அசாருதீனை பார்த்து மார்க் மை வேர்ட்ஸ் இந்தப் பையன் பெரிய ஆளாக வருவான். இந்திய அணியை கேப்டன் செய்ய கூட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவாரோ).

IPL: அவர கேப்டன் பதவியிலிருந்து தூக்குங்க; எப்பயாவது தான் ரன் எடுக்குறாரு - இந்திய வீரர் அதிரடி!

IPL: அவர கேப்டன் பதவியிலிருந்து தூக்குங்க; எப்பயாவது தான் ரன் எடுக்குறாரு - இந்திய வீரர் அதிரடி!

அஸ்வின் பாராட்டு

அதேபோல் சாய் சுதர்சனை பார்த்து நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பையன் மிகப்பெரிய உச்சத்தை தொடுவான் என்று பலமுறை பாராட்டிருக்கிறேன்.

மொழி படம் பாஸ்கார் மாதிரி சொன்னேன்; பெரிய ஆளா வருவான் - சாய் சுதர்சனுக்கு பிரபல வீரர் பாராட்டு! | Ravichandran Ashwin Has Praised Sai Sudarshan

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சாய் சுதர்சன் அதன் பிறகு திரும்பிப் பார்க்காமல் முன்னேறிக்கொண்டே இருக்கிறார். டி என் பி எல், ரஞ்சி கோப்பை, ஐபிஎல், கவுண்டி கிரிக்கெட், இந்தியா ஏ அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டி என அனைத்துமே சாய் சுதர்சன் பிரமாதமாக விளையாடி அசத்தியிருக்கிறார். தொடர்ந்து இதுபோல் பல புகழைப் பெற வேண்டும் மை பாய்" என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.