இந்திய அணி ஜெர்சியிலும் காவியா? வெடிக்கும் விமர்சனம் - அதிலும் அஸ்வின் செய்த சம்பவத்தை பாருங்க!

Indian Cricket Team
By Sumathi Oct 06, 2023 04:24 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காவி நிற ஜெர்சியை அணிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் காலத்தில் இருந்தே நீல நிற ஜெர்சியை தான் அணிந்து வருகிறது. தற்போது ஐசிசி உலக கோப்பை 2023ம் ஆண்டுக்கான தொடரில் வீரர்கள்

இந்திய அணி ஜெர்சியிலும் காவியா? வெடிக்கும் விமர்சனம் - அதிலும் அஸ்வின் செய்த சம்பவத்தை பாருங்க! | Indian Cricket Team Becomes Orange Jersey

பயிற்சி செய்வதற்காக நீல நிறத்தில் ஒரு ஜெர்சி பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதனை திடீரென்று தற்போது முழுமையாக காவி நிறத்திற்கு பிசிசிஐ மாற்றி இருக்கிறது.

காவி ஜெர்சி

இந்த புதிய காவி ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் இன்று பயிற்சி செய்வதற்காக சென்னை வந்தனர். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பிரத்தேயக ஜெர்சி என்று பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.

இந்திய அணி ஜெர்சியிலும் காவியா? வெடிக்கும் விமர்சனம் - அதிலும் அஸ்வின் செய்த சம்பவத்தை பாருங்க! | Indian Cricket Team Becomes Orange Jersey

இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மட்டும் காவி நிற தொப்பிக்கு பதில் நீல நிற தொப்பியை அணிந்து பயிற்சியை மேற்கொண்டார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் வரும் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.  

பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடுமா - உலக கோப்பை திட்டம் தீவிரம்

பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடுமா - உலக கோப்பை திட்டம் தீவிரம்