பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடுமா - உலக கோப்பை திட்டம் தீவிரம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் இடம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
உலகக் கோப்பை
இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது.
5 மைதானங்களை புதுப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. டெல்லி ஸ்டேடியத்திற்கு ரூ.100 கோடியும், ஐதராபாத்துக்கு ரூ.117.17 கோடியும், கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு ரூ.127.45 கோடியும், மொகாலிக்கு ரூ.79.46 கோடியும், மும்பை வான்கடேவுக்கு ரூ.78.82 கோடியும் ஒதுக்கப்படுகிறது.
பாகிஸ்தான்
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி வருகை தரும் போது, அந்த அணி எந்த இடத்தில் விளையாடினால் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது.
முன்பு இந்தியாவுக்கு வந்து விளையாடிய பயணங்களில், கொல்கத்தா, சென்னை மைதானங்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும், மறக்க முடியாத இடங்களாகவும் இருந்தன என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே பாகிஸ்தான் அணிக்குரிய 9 லீக் ஆட்டங்களில் பெரும்பாலானவை கொல்கத்தா, சென்னையில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.