விஜய் மகன் சஞ்சய் உடன் டேட்டிங் - உண்மை உடைத்த பிக்பாஸ் ரவீனா!
சஞ்சய் உடன் காதல் குறித்த வதந்திக்கு ரவீனா அளித்த பதில் வைரலாகி வருகிறது.
நடிகை ரவீனா
தமிழில், பெரிய வரவேற்பை பெற்ற ராட்சசன் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் மெளன ராகம் 2 சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர் தனது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை தவறாது பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது பிக்பாஸ் சீசன் 7-இல் பேட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையின், முன்னதாக விஜய் மகன் சஞ்சய் குறித்து இவர் அளித்த பேட்டி ஒன்று பேசுபொருளாகியுள்ளது. அதில், நான் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகை அவருக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றால் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் கண்டிப்பாக ஹீரோயினாக நடிக்க வேண்டும்.
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தேன்.
ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் நான் ஜேசன் சஞ்சய் காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் தகவலை பரப்பி விட்டார்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.