விஜய் மகன் சஞ்சய்க்கு ஸ்கெட்ச் போடும் இளம் நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை இருப்பதாக ரவீனா தெரிவித்துள்ளார்.
ரவீனா தாஹா
தமிழில், பெரிய வரவேற்பை பெற்ற ராட்சசன் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் மெளன ராகம் 2 சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரீல்ஸ் வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்,
நடிக்க ஆசை
தளபதி விஜய்யின் மகன் ஜெய்சன் சஞ்சய் கதாநாயகனாக நடித்தால் அப்படத்தில் ஜோடியாக அவருடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். ஆனால், சஞ்சய்க்கு அப்பா போல் நடிக்க ஆசை கிடையாதாம். தாத்தா போல் படத்தை இயக்கத்தான் ஆசையாம்.
இதற்காக அவர் படங்களை இயக்குவது குறித்து வெளிநாட்டில் படித்துள்ளார். குறும்படங்களை இயக்கி வருகிறார். தற்போது இயக்குனர்கள் சிலர் அவரை அனுகியதில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.