6 மாத குழந்தையை எலும்பு தெரியும் அளவிற்கு 50 இடத்தில் கடித்து குதறிய எலிகள் - கண்டுக்காமல் இருந்த பெற்றோர்!
6 மாத குழந்தையை எலிகள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலி கடித்த குழந்தை
அமெரிக்காவில், இண்டியானா மாநிலத்தில் உள்ள எவான்ஸ்வில் பகுதியில் வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள், அதில் ஒன்று 6 மாத ஆன் குழந்தை. இவர்களுடன் சேர்ந்து டெலானியா துர்மன் என்ற உறவினர் பெண்ணும் தங்கியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் உள்ளது என்று டேவிட் அவசர சேவைக்கு தகவலளித்தார். உடனடியாக காவல்துறையினர் அங்கு சென்றபோது தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக இருந்தது.
வலது கரத்தில் அனைத்து விரல்களின் சதை முழுவதுமாக இல்லாமல் இருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தது.
மீட்ட போலீசார்
இந்நிலையில், அந்த குழந்தையை போலீசார் இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. மேலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதில் குழந்தை உயிர் பிழைத்துக்கொண்டது. பின்னர், போலீசார் விசாரனை நடத்தியதில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரிய வந்தது.
வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது. இதனால் குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு நலமுடன் உள்ளார். மேலும், மற்ற குழந்தைகளும் தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.