தகாத உறவால் தற்கொலை முடிவு.. உல்லாசத்திற்கு பின் உயிரிழந்த கள்ளக்காதலர்கள்!

Tamil nadu Death
By Vinothini Aug 25, 2023 08:31 AM GMT
Report

கள்ளகாதலர்கள் உல்லாசமாக இருந்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

திருச்சி உறையூரில் உள்ள வடிவேல் நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார், 32 வயதான இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி என்பவரின் மனைவி ஜெயசித்ரா, இவருக்கு 47 வயது. இந்த தம்பதிக்கு இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

2-were-dead-of-illegal-affair

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நந்தகுமாருக்கும், ஜெயசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

தற்கொலை

இந்நிலையில், ஜெயசித்ராவின் கணவர் மற்றும் இவரது உறவினர்களுக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் தெரியவர கடும் எதிர்ப்பு எழுந்தது, இதனால் அவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு நந்தகுமார், ஜெயசித்ராவை தனது வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

2-were-dead-of-illegal-affair

பின்னர், அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர், நீண்ட நேரமாக அவர்களது வீடு திறக்கப்பட்டாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.

அப்போது இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.