கட்டிலில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்
கள்ளக்காதலனுடன் உல்லாசமகா இருந்ததை பார்த்த கணவனை மிளகாய் பொடி தூவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
கிருஷ்ணகிரிமாவட்டம் தட்டக்கல்லை பகுதியை சேர்ந்தவர் கந்தன் இவர் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகின்றார் , கந்தன் 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கந்தன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கொலை சம்பவம் நடக்கும் இரவு அன்று கந்தன் வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது , இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்ர்க ரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்துள்ளார் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
மிளகாய் பொடி தூவி கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலிசார்கந்தன் மனைவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது , அதில் கந்தன் மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ணவன் இல்லாத நேரம் பார்த்து இருவரும் சந்திக்க இந்த பழக்கம் கொஞ்ச நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கம்பி எண்ணும் குற்றவாளிகள்
இந்த நிலையில் கொலை சம்பவம் நடக்கும் முன்பு அதாவது நேற்று முந்தினம் கந்தன் வெளியூர் செல்லவே தனது கள்ளகாதலன் சிவசக்தியை வரவழைத்துள்ளார். அப்போது திடீரென இரவு 10 மணிக்கு கந்தன் வந்துள்ளார் , அப்போது சந்தியாவும் சிவசக்தியும் உல்லாசமாக இருப்பதை பார்த்து கோபமடைந்த கந்தன் தனது மனைவியினை தாக்கவே அப்போது சிவாவுன் சந்தியாவும் கந்தன் கண்ணில் மிளகாய் பொடி தூவி கத்தியால் கந்தனை வெட்டியுள்ளனர்.
அப்போது கந்தன் கதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே கந்தனுக்கு காயமடைந்து விட்டதாக சமாளித்துள்ளார், ஆனால் பிரதே பரிசோதனை மற்றும் போலிசார் விசாரணையில் சிக்கவே தற்போது இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர், இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.