10 அம்ச கோரிக்கை .. போராட்டத்தை கையில் எடுத்த ரேஷன் கடை பணியாளர்கள்! எப்போது தெரியுமா?
தமிழ்நாட்டில் செப்டம்பர் 5-ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
10 அம்ச கோரிக்கை
தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர் சேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
ரேஷன் கடை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்ரமணியன், சேதமடைந்த நியாயவிலைக் கடைகளை சீரமைக்க வேண்டும்.10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியம், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றபடமால் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் வரும் செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.