இனி ரேஷன் கடைகளில் விநியோகம் இப்படி தான் - அதிரடி மாற்றம் கொண்டு வரும் தமிழக அரசு
ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விநியோகம்
சேலம் மாவட்டத்தில், ஒரே ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பொருட்கள் அனைத்துமே பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் உள்ளது.
சோதனை அடிப்படையில் அடுத்ததாக தமிழகம் முழுவதும் 234 கடைகளிலும் தலா ஒரு ரேஷன் கடைகளில் விநோயோகம் செய்யும் திட்டம் துவங்கடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
காரணம்
இந்த முயற்சி, அரசி திருட்டை தடுப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 36,578 நியாய விலை அங்கன்வாடிகளில் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
பல இடங்களிலும் அரிசி திருட்டு என்பது பெரும் குற்றச்சாட்டாக இருக்கும் நிலையில், அதனை தடுக்க அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையே இந்த அரிசி பாக்கெட்கள் விநியோகம் செய்ய முயல்வது என்பது குறிப்பிடத்தக்கது.