உடனே "இதனை" செய்யுங்கள்...இல்லனா ரேஷன் கார்ட் முடக்கப்படும்..அரசு அதிரடி
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்ட்டை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், அந்த கார்ட் முடக்கப்படும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கார்டு
நாட்டிலுள்ள மக்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட வருகின்றது. இதில் வழங்கப்டும் பொருட்கள் மாநில தோறும் மாநில அரசின் திட்டங்களால் மாறுபடும் என்றாலும், நாட்டின் பல ஏழை எளிய மக்களுக்கு மிகவும் உதவும் ஒரு திட்டமாகவே இந்த ரேஷன் கார்ட் திட்டம் இருந்து வருகின்றது.
செப்டம்பர் 30 தான் கடைசி
இந்நிலையில், இந்த ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டையும் இணைக்கவேண்டும் என மத்திய அரசு முன்னரே அறிவித்திருந்தது. ஆனால், கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்படும் இதனை பலரும் செய்திடாத நிலையில், வரும் செப்டெம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைத்திட வேண்டும் என கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு இணைக்காவிட்டால், அதன் பிறகு தவறும் நபர்களின் ரேஷன் கார்டு முடக்கப்படும் என்றும் அதன் பிறகு எந்த வித சலுகைகளும் கார்டு வைத்திருப்போர் பெறமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.