இனி துவரம் பருப்பு, பாமாயில்.. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கடை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடை
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நமது மாநிலத்தில் 2.23 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பல ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
அரசு அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மே மாதத்துக்கு தேவையான 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு/ கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி
இந்திய தேர்தல் ஆணைய 18.04.2024ம் தேதி ஒப்புதலின்படி 20.4.2024 அன்று கோரப்பட்டு 20.05.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்தாரர்களுடன் விலைக்குறிப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஆகவே அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.