ரேஷன் கார்டுகளுக்கு ஜாக்பாட் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

Tamil nadu India
By Sumathi Apr 12, 2023 04:29 AM GMT
Report

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டை

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமலில் உள்ளது.

ரேஷன் கார்டுகளுக்கு ஜாக்பாட் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு! | Jackpot For Ration Card Holders Central Government

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது.

ஒரே நாடு ஒரே ரேஷன்

மின்னணு தராசுகளுடன் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்து பயனாளிகள் முழு அளவில் உணவு தானியங்களைப் பெற வழிவகை செய்துள்ளது. எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது 'மொபைல்' ரேஷன் கடை திட்டத்தை, மே மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். இதன் மூலம் படிப்படியாக தனியார் வாகன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச்செல்லும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வாங்கும் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட வேண்டும். இது தவிர அந்தந்த பகுதிகளில் வார்டு வாரியாக, மொபைல் ரேஷன் கடைகளை பிரித்து, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.