இனி கவலை வேண்டாம்...உங்கள் வீடு தேடி வரும் ரேஷன் கார்டு - வெளியான முக்கிய தகவல்..!
ரேஷன் கார்டு உங்கள் வீடு தேடி வரும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, மாநில அரசு சார்பாக உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.
வீடி தேடி வரும் ரேஷன் கார்டு
மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இந்த உதவிகளை நீங்கள் பெறமுடியும்.
அதோடு, ரேஷன் கார்டில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதை முதன்முதலில் வாங்குவது மிகவும் சிரமம். ஏனெனில் விண்ணப்பிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அது கைக்கு வந்து சேர்வதில் நிறைய பிரச்சனைகள் உள்ளன.
சிலருக்கு பல மாதங்கள் ஆகியும் ரேஷன் கார்டு வராது. சிலர் தாலுகா அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கும். இதோடு மன உளைச்சலையும் தருகிறது.
இதனால் சிலர் ரேஷன் கார்டுக்கே விண்ணப்பிப்பதில்லை. இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம், உணவு வழங்கல் துறை அனுமதி கேட்ட நிலையில், அதை பரிசீலித்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது அது வாடிக்கையாளரின் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும். விண்ணப்ப படிவத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கான ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அச்சிடப்பட்ட பின்னர் போஸ்ட் மேன் மூலம் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும். இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.