ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சூப்பரான நியூஸ் - என்னென்னு தெரியுமா? இதோ
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட சலுகைகளும் அவ்வப்போது பொதுமக்களுக்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சமையல் சிலிண்டர்களும் இனி ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
2 ஆண்டுகளுக்கு முன்னரே ரேஷன் டீலர்கள் சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விரைவில் 5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்திருக்கிறது. எனவே, இனிவரும் காலங்களில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல உணவுப் பொருள்களுடன் மானிய விலையில் சமையல் சிலிண்டர் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிலிண்டர் விலை என்ன ? என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.