வளர்ப்பு நாய் முதல் சாந்தனு நாயுடு வரை; உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா - எதிர்பாராத திருப்பங்கள்!
ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய், சமையல்காரர், உதவியாளருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களை எழுதிவைத்துள்ளார்.
ரத்தன் டாடா
தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. இவர் எப்போதுமே தனது வளர்ப்பு நாய்களுடன் இருப்பார்.
ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். இந்நிலையில், இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார்.
சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை தள்ளுபடி செய்தார். அதோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். இவர் வசித்து வந்த வீடு 10 ஆயிரம் கோடி மதிப்புடையது.
சொத்து மதிப்பு
இது தவிர மும்பை ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 30க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள், 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் இருக்கிறது.
100 பில்லியன் டாலர் கொண்ட டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போதிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சொத்துகளை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.