3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தந்தை, மகன் செய்த சம்பவம்!

Chhattisgarh Crime Flight Mumbai
By Sumathi Oct 16, 2024 11:43 AM GMT
Report

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக தந்தை, மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு மர்ம நபர்கள் எக்ஸ் தளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லியை நோக்கி திருப்பி விடப்பட்டது.

flight

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நீண்ட நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றன. அதன்பின் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் பெற்றோர் - பிள்ளைகள்!! போலீசார் தீவிரம்

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் பெற்றோர் - பிள்ளைகள்!! போலீசார் தீவிரம்

போலீஸார் சம்மன்

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தந்தை, மகன் செய்த சம்பவம்! | Bomb Threats To 3 Planes Summon To Father Son

அதில், சத்தீஷ்கர் ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகிய இருவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதில், அந்த சிறுவனின் தந்தையுடைய எக்ஸ் வலைதள கணக்கில் இருந்துதான் மிரட்டல் பதிவு வெளியாகி இருப்பதாகவும், அவர்கள் இருவரையும் விசாரணைக்காக மும்பை வருமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.