சென்னை பிரபல மாலிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் உறைந்த மக்கள்
சென்னையில் தனியார் பிரபல மாலிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பு, வந்த இந்த வெடிகுண்டு மிரட்டலால், நிறைய பெற்றோர்களுக்கு பயத்திற்கு ஆளானார்கள்.
சென்னை காவல் துறையும் இதில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. இறுதியில், அது வெறும் மிரட்டல் மட்டுமே என விசாரணையில் தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையின் பிரபல மால் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான அமைந்திருக்கும் VR மால், தினமும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து வருகின்றது.
பிரபல மால்
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மாலில் திரையரங்கம், கடைகள் என பல இருக்கும் காரணத்தாலும், சென்னையின் முக்கிய இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தினாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கிறார்கள்.
இந்த மாலிற்கு தான் தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்நிலையில் இந்த மாலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.