8 மாதங்களில் 15 முறை கடித்த எலி..மாணவியின் கை- கால் செயலிழந்த கொடூரம் -நடந்தது என்ன?
15 முறை கடித்த எலி மாணவியின் கை- கால் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம், தானவாய்குடத்தில் என்ற பகுதியில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் எலிகளின் நடமாட்டம் அதிக அளவிலிருந்துவந்துள்ளது.
இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி பவானி கீர்த்தி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். கடந்த மார்ச் முதல் நவம்பர் வரை எலி கடித்துள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
15 முறை கடித்த எலி
இந்த சுழலில் மீண்டும் லக்ஷ்மியை எலி கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். ஒருகட்டத்தில் , உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எலி கடித்ததால் லட்சுமிக்குப் பக்கவாதம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் 8 மாதங்களில் 15 முறை எலி கடித்துள்ளது.