இதுக்காக பெருமைப்படணும்.. இந்தியா வேகமா வளர்ந்துருக்கு - மோடி ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா!
இந்தியாவின் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
அடல் சேது
மும்பை-நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் 'அடல் சேது' பாலத்தை குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில் "2 மணி நேர பயணம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்து விட்டது.
இதை உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? நவி மும்பையில் இருந்து மும்பை, கோவாவில் இருந்து மும்பை, பெங்களூரில் இருந்து மும்பை என எல்லா பயணங்களும் அற்புதமான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்டான நாடு
இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது.
20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு.
இளம் பாரதியர்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.