இந்தியாவின் மிக நீளமான 'அடல் சேது' கடல் பாலம் - காரில் பயணிக்க ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம்!
இந்தியாவின் மிக நீளமான 'அடல் சேது' கடல் பாலத்தின் பயண கட்டண விவரம்.
மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட இந்த பாலம், நேற்று முதல் பொது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாட்டின் மிக நீளமான இந்த பாலத்தில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணம்
கார் ஒரு முறை பயணம் செய்ய 250 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை சென்று திரும்பி வர (Return Journey) 375 ரூபாய் செலுத்த வேண்டும்.
பாஸ் அடிப்படையில் ஒரு நாளுக்கு 625 ரூபாயும், ஒரு மாதத்திற்கு 12,500 ரூபாயும் செலுத்த வேண்டும். எனவே ஒருவர் மாத பாஸ் எடுத்து சென்று வந்தால் வருடத்திற்கு ரூ.1,50,000 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.