பூமியில் விழுந்த அரிதான விண்கல்; 4 வருட சட்ட போராட்டம் - யாருக்கு சொந்தம்?
4 வருடங்களுக்கு முன் விழுந்த விண்கல்லானது நில உரிமையாளருக்கு சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரும்பு விண்கல்
ஸ்வீடனில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு விண்கல் ஒன்று நபர் ஒருவரின் நிலத்தில் பெரிய சத்தத்துடன் விழுந்துள்ளது. இதனை அறிந்த Anders Zetterqvist என்ற புவியியலாளர் 4 வருட தேடுதலுக்கு பின் விண்கல் விழுந்த இடத்தை கண்டுபிடித்தார்.
மற்றொரு புவியியலாளரான ஆண்ட்ரியாஸ் ஃபோர்ஸ்பெர்க் என்பவர் அந்த விண்கல் புதையுண்ட இடத்தை கண்டுபிடித்து தோண்டி எடுத்துள்ளார். ஆனால் விண்கல் 30 பவுண்ட் எடையுள்ள இரும்பு விண்கல் ஆகும்.
இத்தகைய விண்கல் மிகவும் அரிதானவை மற்றும் விலைமதிப்பற்றவை. இதனால் அந்த விண்கல்லை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைத்தனர். கடந்த 2020 முதல் அந்த இரும்பு விண்கல்லானது அருங்காட்சியகத்தில் இருந்து வந்துள்ளது.
யாருக்கு சொந்தம்?
இந்நிலையில் விண்கல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தின் உரிமையாளர், "என் நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட விண்கல் எனது அசையா சொத்து" என்று உரிமை கோரி சமீபத்தில் அந்த அருங்காட்சியகத்திற்கு நோட்டிஸ் அனுப்பினார்.
இதற்கான சட்டப்போராட்டம் தொடங்கிய நிலையில், வழக்கை விசாரித்த உப்சாலா மாவட்ட நீதிமன்றம் "புதிதாக விழுந்த விண்கல் அது நிலத்தில் விழுந்த சொத்தின் ஒரு பகுதியாக இல்லை" ஆகவே இது அசையும் சொத்து , அரசாங்கத்தின் சொத்து என்று தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து நில உரிமையாளரான ஜோஹன் பென்செல்ஸ்டீர்னா வான் என்ஜெஸ்ட்ராம் என்பவர் மேல் முறையீடு செய்தார். இதில் இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி கிரீன், இந்த விண்கல்லானது நில உரிமையாளருக்கு சொந்தம் என்று மாற்று தீர்ப்பளித்தார்.