காபி குடித்து கொண்டிருந்த பெண் மீது தொடர்ந்து வந்து விழுந்த விண்கற்கள்..!
மொட்டை மாடியில் காபி குடித்து கொண்டிருந்த பெண் மீது வரிசையாக விண்கற்கள் வந்து விழுந்ததால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
பெண் மீது வந்து விழுந்த விண்கற்கள்
பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் தனது நண்பருடன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ஏதோ ஒரு பொருள் வந்து முதலில் விழுந்துள்ளது.
அதை கண்டுக்கொள்ளாத அவர் பறவை ஏதும் மோதியிருக்கலாம் என்று நினைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை சுற்றி கற்களை் கிடப்பதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அந்த கற்களை எடுத்து பார்த்துள்ளார்.
கற்கள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த அவர், புவியியல் அறிவியலாளர் ஒருவரிடம் எடுத்துச் சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த கற்களை ஆய்வு செய்த போது அதில் இரும்பு மற்றும் சிலிகான் தாதுக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
அரிய நிகழ்வு
மேலும் மாடியில் விழுந்ததாக கொண்டு வரப்பட்ட அந்த கல் ஒரு விண்கல் எனவும், அது 100 கிராம் எடையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் விண்கற்களால் மனிதர்கள் தாக்கப்படுவது மிக மிக அபூர்வம் என்று தெரிவித்துள்ளனர்.
பூமியை நோக்கி வரும் விண்கற்கள் நேராக பூமியின் மேற்பரப்பில் தான் விழும் என்றம் இப்படி வீட்டின் மொட்டை மாடியில் விழுவது அரிய நிகழ்வு என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.