காதலன் கண்முன்னே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 4 சிறுவர்கள் வெறிச்செயல்!
4 சிறுவர்கள் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
பெங்களூரில், இளம்பெண் ஒருவர் அவரது காதலனுடன் குப்பையைக் கொட்ட சென்றுள்ளார். அப்போது நான்கு பேர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளனர்.
தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணின் உடல்களைத் தொட்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். அதனை தடுத்த பெண்ணை முகத்தில் தாக்கியுள்ளனர். மேலும், காதலனையும் மரக்கட்டையால் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சிறுவர்கள் கொடூரம்
உடனே, இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். கோரமங்களா பாஸ்போர்ட் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவர்கள் 18 வயதுக்கும் கீழ்பட்ட சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.