பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்; கதறிய 16 வயது சிறுவன் - ஆயுள் தண்டனை!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
சேலம், நாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காயத்திரி(23). எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்கிற முல்லை(24). திருநங்கைகளான இருவரும் 2022ல் ஹோட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளனர்.
அந்த ஹோட்டலில் 16 வயது சிறுவன் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 2 திருநங்கைகளும் சிறுவனிடம் பிரியாணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த சிறுவனின் தாய் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் இரண்டு திருநங்கைகள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசார் சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக காயத்திரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்துள்ளார்.