திருநங்கை, திருநம்பி தம்பதிக்கு இயற்கையாக பிறந்த ஆண் குழந்தை - ஆச்சர்யத் தகவல்!
கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை - திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கேட்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருநங்கை - திருநம்பி
தென் அமெரிக்காவைச் சேர்ந்த டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய மாடல் ஆவார். இவர் பிறக்கும்போது ஆணாக பிறந்தார். ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார்.
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.
ஆண் குழந்தை
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதனையடுத்து, அவர் கர்ப்பமானார். தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
ஆச்சர்யத் தகவல்
அதேபோல, மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என்று குழம்பி உள்ளனர். எனினும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும், இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால், இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது முதன்முறையல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 2020இல் அமெரிக்காவின் ஒரேகானில் ஒரு பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறிய ஒருவர் இதுபோன்று குழந்தை பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.