காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட திருநங்கை - திருநம்பி ஜோடி
நேற்று காதலர் தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காதலர் தினமான நேற்று திருவனந்தபுரத்தில் திருநங்கை- திருநம்பி காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் திருநம்பி மனு கார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் 3-ம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் திருநங்கை சியாமா பிரபா (31). கடந்த 10 வருடங்களாக இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காதலர் தினத்தில் திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரி அரங்கத்தில் திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களின் திருமணத்திற்கு உறவினர்களும், நண்பர்களும் வந்து தம்பதி இருவரையும் வாழ்த்தினார்கள்.