எங்க குடும்பத்துல 10வது பாஸ் பண்ண ஒரே ஆள் நான்தான்.. ரன்பீர் கபூர் ஓபன் ஸ்டேட்மெண்ட்!
ரன்பீர் 53 சதவிகிதம் மட்டுமே எடுத்து தேர்ச்சியடைந்திருந்தாலும் அதனை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்கள்.
ரன்பீர் கபூர்
பாலிவுட்டில் பிரபலமானவர்கள் கபூர் குடும்பம். நான்கு தலைமுறைகளாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்கால ஜெனரேஷனாக இருப்பவர் ரன்பீர் கபூர்.
சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் குடும்பத்தில் ரன்பீர் கபூரின் தாத்தா பிருத்விராஜ் கபூர், தாத்தா ராஜ் கபூர், தந்தை ரிஷி கபூர் மற்றும் பல உறவினர்கள் நடிகர்கள் என யாருமே பத்தாவது கூட தேர்ச்சியடையவில்லையாம்.
கபூர் குடும்பம்
முதன் முதலில் 10 வது தேர்ச்சி பெற்ற கபூர் வாரிசு ரன்பீர் கபூர்தான். அதனால் அவர்களது குடும்பத்தினர் ரன்பீர் 53 சதவிகிதம் மட்டுமே எடுத்து தேர்ச்சியடைந்திருந்தாலும் அதனை விருந்து வைத்து கொண்டாடினார்களாம்.
அதை ரன்பீர் கபூரே தெரிவித்திருக்கிறார். ரன்பீரும் படிப்பில் மந்தமாகத்தான் இருந்திருக்கிறார்.ஷம்ஷேராவுக்கான புரமோஷனுக்காக ரன்பீர் இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிக்க டோலி சிங்கின் கதாபாத்திரமான ‘ராஜூ கி மம்மி’யுடன் பேசினார்.
10 வது தேர்ச்சி
அப்போது கேட்கப்பட்ட கேள்விக்குதான் ரன்பீர் இத்தகைய பதிலளித்துள்ளார். முன்னதாக 2017 இல் நிகழ்ச்சி ஒன்றில் உரையாடிய, ரன்பீர் தன்னை தனது குடும்பத்தில் மிகவும் படித்த உறுப்பினர் என்று அழைத்தார்.
“எனது குடும்ப வரலாறு அவ்வளவு சிறப்பாக இல்லை. எனது தந்தை 8ஆம் வகுப்பிலும், எனது மாமா 9ஆம் வகுப்பிலும், எனது தாத்தா 6ஆம் வகுப்பிலும் தோல்வியடைந்தனர். நான்தான் உண்மையில் என் குடும்பத்தில் மிகவும் படித்த உறுப்பினர். ”என தெரிவித்தார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ரன்பீர் 2007 இல் பாலிவுட்டில் அறிமுகமாகும் முன் வெளிநாட்டில் நடிப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பு கல்வியை பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவியை விருந்தாக்கும் பார்ட்டி...கேரளாவை தொடர்ந்து இங்கயும்?