வருங்கால கணவருடன் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் - வீடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்
தனது வருங்கால ணவருடன் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ரம்யா, ஃபோட்டோ ஷூட்டிற்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.. சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாகவே இருப்பார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லோகன் தவான் என்பவரிடம் யோகா பயிற்சி பெற்று வந்துள்ளார் ரம்யா. அப்போது காதல் மலர்ந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
இவர்களது திருமணம் அடுத்த மாதம் (நவம்பர் 15) ரிஷிகேஷில் கங்கை நதி கரையோரம் உள்ள ஒரு கோயிலில் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் வருங்கால கணவருடன் காதல் ததும்ப எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்யா பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil