ஜோதிகா வேறொருவருடன் நடிக்கிறது பிடிக்கவில்லை - போட்டுடைத்த சூர்யா!
ஜோதிகா குறித்து சூர்யா பேசியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சூர்யா உட்பட படக்குழு அனைவரும் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்றில் பேசிய சூர்யா, சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கலாமா ? வேண்டாமா ?என யோசித்துக்கொண்டிருந்தேன்.
சில்லுனு ஒரு காதல்
அப்போது ஜோதிகா இப்படத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என சொல்லிவிட்டார். ஜோதிகா வேறொரு நடிகருடன் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை.

எனவே தான் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க சம்மதித்தேன் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா விரைவில் இணைந்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil