இளையராஜா கொடுத்த அந்த மறக்கமுடியாத கிஃப்ட் - பகிர்ந்த பிரேம்ஜி மனைவி!

Tamil Cinema Ilayaraaja Premji Amaren Marriage
By Sumathi Oct 26, 2024 11:30 AM GMT
Report

இளையராஜா கொடுத்த பரிசு குறித்த தகவலை பிரேம்ஜி மனைவி பகிர்ந்துள்ளார்.

 பிரேம்ஜி-இந்து

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி. கடைசியாக வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் நடித்திருந்தார்.

premji - indhu

இதற்கிடையில் 45 வயதில் கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெங்கட் பிரபு முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா செல்லவில்லை.

ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யும் அபிஷேக் பச்சன்? பூதாகரமான விவகாரம்!

ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யும் அபிஷேக் பச்சன்? பூதாகரமான விவகாரம்!

இளையராஜா பரிசு 

அதனையடுத்து பலரும் இதுதொடர்பான சர்ச்சைகளை கிளப்பினர். இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள இந்து, "இளையராஜா மாமா எங்கள் திருமணத்துக்கு வரவில்லை என்று சமூக வலைதளங்களில் எல்லோரும் தவறாக கமெண்ட் செய்திருந்தார்கள்.

premji with ilayaraja

எங்கள் திருமணம் கோயிலில் நடந்தது. சரியான கூட்டம். அதனால்தான் அவரால் வர முடியவில்லை. ஆனால் எங்கள் இரண்டு பேரையும் இளையராஜா அவரது வீட்டுக்கு அழைத்து மனதார வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார். எங்களுக்காக நேரம் ஒதுக்கி விருந்தும் வைத்தார்.

அதற்கு பிறகு எங்களால் வாழ்நாள் முழுக்கவும் மறக்கவே முடியாத பரிசு ஒன்றை கொடுத்தார். அதை வெளியில் சொல்லமாட்டோம். அது அப்படி ஒரு பரிசு" எனத் தெரிவித்துள்ளார்.