அழகா இல்லைனு தோணும்; என் கிட்ட யாருமே பேச மாட்டாங்க - மனம் திறந்த சாய் பல்லவி

Sivakarthikeyan Sai Pallavi Tamil Cinema Tamil Actress Amaran
By Karthikraja Oct 24, 2024 10:30 PM GMT
Report

அழகாக இருக்கீங்கன்னு பசங்க சொன்னால் நம்ப மாட்டேன் என சாய் பல்லவி பேசியுள்ளார்.

சாய் பல்லவி 

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சாய் பல்லவி. 

சாய் பல்லவி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த அமரன் திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அமரன் பட ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ள சாய்பல்லவி ஒரு பேட்டியில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். 

10 வருடங்களாக அவரை காதலித்து வருகிறேன் - சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி

10 வருடங்களாக அவரை காதலித்து வருகிறேன் - சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி

நாம அழகவா இருக்கோம்

இதில் பேசிய அவர், என்னுடைய முதல் படம் பண்ணிட்டு ஜார்ஜியா போன பிறகு, என்னுடைய போட்டோவை நிறைய பேர் டிஸ்பிளே பிக்சராக வைச்சிருந்தாங்க. நாம என்ன அழகவா இருக்கோம் நம்மளை டிஸ்பிளை பிக்சர் வைச்சிருக்காங்களேன்னு நினைச்சேன். 

சாய் பல்லவி

அம்மா எப்போதுமே நீ ரொம்ப அழகாக இருக்கனு சொல்லிட்டே இருப்பாங்க. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அப்படின்னு அவங்களை கிண்டல் பண்ணுவேன். அப்புறம் அதற்கு ஒரு ஆதாரம் தேடுவோம்ல. இரண்டு, மூன்று பசங்க சொன்னங்கன்னா பார்ப்போம்ன்னு.

யாருமே பேசமாட்டாங்க

ஆனால், எல்லோருமே என்னைப் பார்த்தால் பயப்படுவாங்க. ஏனென்றால், அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால் என்கூட யாருமே பேசமாட்டாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்ங்க எல்லாம் இரண்டு, மூன்று பசங்க கூட பேசிட்டு இருப்பாங்க. அது ஒரு ஃபீல்.

சின்ன வயதில் முகப்பருவை பார்த்துட்டு பெரியவங்க வந்து ஏன் இப்படி இருக்கு அப்படின்னு சொல்லிட்டுப்போவாங்க. இதனால், நாம் அழகாக இல்லையோ அப்படின்னு ஃபீல் இருந்திருக்கு. நம்ம ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம், பசங்க அழகாக இருக்கன்னு சொல்லி, நம்மகிட்ட அவங்க சொல்லாத போதும் ஒரு ஃபீல் இருந்திருக்கு.

இந்த ஜெனரேஷன் பசங்களுக்கு எல்லோரையும் வெளிப்படையாக வர்ணிக்க முடியுது. ஆனால், அப்ப இருக்கிறவங்களுக்கு வர்ணிக்க எல்லாம் வராது, ஐ லக் யூன்னு மட்டும் தான் சொல்லுவாங்க. பொண்ணுங்க அழகாக இருக்கீங்கன்னு சொன்னால், நான் நம்புவேன். ஆனா பசங்க சொன்ன நம்ப மாட்டேன். அவங்களுக்கு எல்லா பொண்ணுங்களும் அழகுதான்" என பேசினார்.