இன்னும் மறக்கல.. அப்பா அதுக்காக அப்படியே மாறிட்டாரு - நடிகர் ராமராஜன் மகள் பேட்டி!
நடிகர் ராமராஜன் குறித்து அவரது மகள் அருணா பேசியுள்ளார்.
நடிகர் ராமராஜன்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக வளம் வந்தவர் ராமராஜன். நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், இதுவரை 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் இவரின் படங்கள் ரஜினி, கமல் முன்னணியில் இருந்த நடிகர்களுக்கு போட்டியாக 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியுள்ளது. இவர் கடந்த 1987-ம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் கடந்த 2000-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் உள்ளனர். இதனிடையே 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்த ராமராஜன் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்னும் மறக்கல
இவர் நடிப்பில் சாமானியன் என்ற படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ராமராஜனின் மகள் அருணா அளித்த பேட்டி ஒன்றில் "இத்தனை வருடம் கழிச்சு அப்பா நடிக்க வந்தாலும் ஒரு தரமான படத்துல நடிச்சு, தான் யாருன்னு மீண்டும் நிரூபிச்சுட்டாரு. அப்பாவை மக்கள் இன்னும் மறக்கல.
அதே கிரேஸோடதான் இருக்காங்க. அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணணும், பழைய மாதிரி வரணும்னு அம்மா சொன்னாங்க. அப்பாவுக்கு இந்த ஜானர்ல நடிக்கிறது புதுசு. ஒரு கொள்கையோடு இருப்பாரு.
ஆனா இப்போ, ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி மாறிட்டாரு. அப்பா பேட்டியெல்லாம் அதிகமா கொடுக்கமாட்டாரு. இப்போ அவர் தொடர்ச்சியா பேட்டி கொடுத்திருக்கிறது ஆச்சரியமா இருக்கு. இன்னைக்கு எந்த மீடியாவைத் திறந்தாலும் அவர் முகம்தான் தெரியுது" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.