விஜயகாந்துடன் நடிக்க மறுத்தேன்; அவரு சொன்ன விஷயம் எனக்கு ஷாக் - போட்டுடைத்த ராமராஜன்!
நடிகர் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் ராமராஜன் பேசியுள்ளார்.
நடிகர் ராமராஜன்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக வளம் வந்தவர் ராமராஜன். நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், இதுவரை 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் இவரின் படங்கள் ரஜினி, கமல் முன்னணியில் இருந்த நடிகர்களுக்கு போட்டியாக 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியுள்ளது. இதனிடையே 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்த ராமராஜன் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் சாமானியன் என்ற படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராமராஜன் "நான் நடித்த நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படம் வெற்றி அடைந்ததும் அந்த படத்தின் இயக்குநர் எனக்கு போன் போட்டு அடுத்த படத்துக்கு ரெடியாகு என்று சொன்னார்.
மறுத்தது ஏன்?
நானும் சந்தோஷம் சார் என்று சொன்னேன். பின்னர் அந்த படத்தில் இன்னொரு நடிகர் விஜயகாந்த் என்று அவர் சொன்னதும் நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அப்போது அவரிடம் நான் சொன்னேன் "சார் நீங்க எனக்கு “நம்ம ஊரு நல்ல ஊரு” படம் எடுக்கும்போது என்ன சொன்னீங்க?
இந்த படத்தில் 70 சீன் உன்னை வச்சி இருக்கு. நீ இல்லாத 10 சீனும் உன்னை பத்தி தான் பேசுவாங்கன்னு சொன்னீங்க. இப்படி ஒரு ஹீரோவா முதல் படத்தில் என்னை அறிமுகப்படுத்திட்டு இரண்டாவது படத்திலேயே செகண்டு ஹீரோவா மாத்துறீங்கன்னு கேட்டேன். உடனே இயக்குநரும் சரின்னு விஜயகாந்திடம் பேசாமல் விட்டுவிட்டார்.
சில வருடங்கள் கழித்தும் விஜயகாந்துடன் நடிக்க ஒரு படத்தில் வாய்ப்பு வந்தது. அப்போதும் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம், அப்போது அவர் முக்கிய நடிகராக இருந்தார். அவரோடு நடிக்கும் போது நாம இரண்டாவது ஹீரோவாகத்தான் இருப்போம் என்பதா தான் நான் மறுத்தேன்" என ராமராஜன் தெரிவித்துள்ளார்.