கனகாவை பார்த்து பயங்கர ஷாக் ஆகிட்டேன்; பேச விரும்பல - ராமராஜன் பகீர் பேட்டி!
நடிகை கனகா குறித்து ராமராஜன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
நடிகை கனகா
தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியே உள்ளார்.
தற்போது சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். படத்தில் வாய்ப்பில்லை, காதல் ஒன்றுகூடவில்லை, அப்பாவுடன் சொத்து பிரச்சனை என வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
ராமராஜன் பேட்டி
அண்மையில், நடிகை குட்டி பத்மினி அவரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. அதில், கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். இந்நிலையில் கனகா குறித்து நடிகர் ராமராஜன் அளித்த சமீபத்திய பேட்டியில், "ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன்.
அப்போது ஒருவர் வந்து உங்களை பார்க்க கனகா வந்திருக்கிறார் என்று சொன்னார். நான் ஆர்வமாக சென்று ஒரு பெண்மணியிடம் கனகா எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர் நான் தான் கனகா என்று சொல்லி சிரித்தார். வெயிட் போட்டு தலையில் சிகப்பு நிற டை அடித்து ஆளே மாறியிருந்தார்.
நான் ஷாக் ஆகிட்டேன். அதற்கு மேல் அதை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் ஒன்று அவரது அம்மா உயிரிழப்பு கனகாவை ரொம்பவே பாதித்தது” எனத் தெரிவித்துள்ளார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
