வெளியவே வராமல் வீட்டு சிறையில் கனகா; பார்க்க முயன்ற கங்கை அமரன் - பகீர் தகவல்!
வீட்டு சிறையில் உள்ள நடிகை கனகாவை கங்கை அமரன் பார்க்கச் சென்றுள்ளார்.
நடிகை கனகா
தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியே உள்ளார். தற்போது சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். படத்தில் வாய்ப்பில்லை,
காதல் ஒன்றுகூடவில்லை, அப்பாவுடன் சொத்து பிரச்சனை என வீட்டிலேயே முடங்கி உள்ளார். இந்நிலையில், கனகா ஹீரோயினாக நடித்த கரகாட்டக்காரன் படத்தை இயக்கிய இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் அளித்த பேட்டி ஒன்றில்,
கங்கை அமரன் வேதனை
கனகா இப்போது ஆதரவு இல்லாமல் இருப்பதாக செய்திகளைப் பார்த்தேன். இரண்டு மூன்று முறை போன் செய்தேன். அவள் அழைப்பை எடுக்கவில்லை. வாய்ஸ் மெஜேஜ் ஒன்றை அவளுக்கு அனுப்பினேன். அப்போதும் அவள் திருப்பி அழைக்கவில்லை. மேலும், ஒருமுறை வீட்டிற்கே சென்று பார்க்க முயன்ற நிலையில் பார்க்க மறுத்துவிட்டார்.
தனிமையில் இருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள். எனக்கு அவளை பார்க்க வேண்டும் என்றும் ஆசை. இந்த பேட்டியை பார்த்தால் கனகா என்னை அழைக்க வேண்டும். பேசாமல், என்னை பார்சல் செய்து அவள் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். அப்படியாவது அவளை பார்த்துவிடலாம் என வேதனை தெரிவித்துள்ளார்.