அவருக்காகத் தான் கனகா காத்திருக்கிறார்; அதனால்தான் கமல் கூட நடிக்கல - பகீர் கிளப்பிய பிரபலம்
நடிகை கனகா குறித்த தகவல்கள் பல பகிரப்பட்டு வருகிறது.
நடிகை கனகா
தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியே உள்ளார்.

தற்போது சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். தொடர்ந்து, படத்தில் வாய்ப்பில்லை, காதல் ஒன்றுகூடவில்லை, அப்பாவுடன் சொத்து பிரச்சனை என வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
வீட்டில் தனிமை
இந்நிலையில், கமலோடு நடிகை கனகா நடிக்காததற்கு காரணம் அவருடைய அம்மா எடுத்த முடிவு தான். அது தன்னுடைய மகளின் இமேஜை பாதித்துவிடும் என்று அவர் நினைத்ததால் நடிக்க வைக்கவில்லை.

பிறகு கனகாவுக்கு காதல் ஏற்பட்டது அவர் யாரை காதலித்தார் என்பது இன்னமும் யாருக்கும் தெரியாத ரகசியம். தன்னுடைய காதலனுடன் சில காலம் ஒன்றாக வாழ்ந்து வந்தது மட்டும் அல்லாமல் காதலனுடன் வெளிநாட்டிற்கும் சென்றிருந்தார்.
பிறகு தனிமையில் இருந்தார். யாரையும் வீட்டிற்குள் வந்து பேசவிடாமல், சிகிச்சை எடுக்கவும் தயாராக இல்லாமல் இருக்கிறார். எப்போதுமே தனியாக இருப்பதையே அவர் விரும்புகிறார். காரணம் அவர் அவருடைய காதலனுக்காக காத்திருக்கிறார் என்பதுதான் அதற்கு பதிலாக இருக்கும் என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
You May Like This Video
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan