ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்; அதனால தான் ரஜினி இப்படி இருக்காரு - போட்டுடைத்த பாண்டியராஜன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நடிகர் பாண்டியராஜன் பேசியுள்ளார்.
பாண்டியராஜன்
கன்னிராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டியராஜன். இதனையடுத்து ஆண் பாவம் படத்தை இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களை இயக்கியும், ஹீரோவாக நடித்தும் வந்தார்.

தற்போது சில படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். பாண்டியராஜன் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "நான் ஒருமுறை ரஜினிகாந்தை விமான நிலையத்தில் பார்த்தேன்.
அந்த பண்பு
அவரும் என்னை பார்த்தது போல இருந்ததால் நான் கை அசைத்தேன். ஆனால், அவர் கை அசைக்கவில்லை. சரி அவர் நம்மை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலை அவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது.

நேற்று ஏர்போட்ர்டில் கை அசைத்தீர்கள் பார்த்தேன். ஆனால், அந்த சூழ்நிலையில் என்னால் கையை அசைக்க முடிவில்லை.. மன்னிக்கவும் என்றார். அந்த பண்பால் தான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil