ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்கள் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன?

Tamil nadu O. Panneerselvam Ramanathapuram Lok Sabha Election 2024
By Jiyath Jun 04, 2024 09:14 AM GMT
Report

ராமநாதபுரம் மக்களவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 50,407 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார்.

ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்கள் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன? | Ramanathapuram Duplicate Ops S Votes

அதே தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் சுயேச்சையாக களம் கண்டனர். இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி 97,704 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய பாஜக அரசு - ஜம்மு காஷ்மீரில் ஏறி அடிக்கும் இந்தியா கூட்டணி!

சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய பாஜக அரசு - ஜம்மு காஷ்மீரில் ஏறி அடிக்கும் இந்தியா கூட்டணி!

ஓ.பன்னீர் செல்வம்

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் 50,407 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 21,217 வாக்குகளும், நாதக வேட்பாளர் 16,725 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்கள் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன? | Ramanathapuram Duplicate Ops S Votes

மேலும், ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 579 வாக்குகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 107 வாக்குகளும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 310 வாக்குகளும், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 210 வாக்குகளும் பெற்றுள்ளனர்.