சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய பாஜக அரசு - ஜம்மு காஷ்மீரில் ஏறி அடிக்கும் இந்தியா கூட்டணி!
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 இடங்களுள் 4 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியான இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு விதி 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் வெளி மாநிலங்களை சேர்த்தவர்கள் நிலம் வாங்கக்கூடாது உள்ளிட்டவை நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அங்கு நடந்த முதல் மக்களவை தேர்தல் இதுவாகும்.
இந்தியா கூட்டணி
எனவே, ஜம்மு காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 இடங்களுள் 4 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
1 இடத்தில் பாஜவின் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி 2 முதல் 3 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.