வாக்கு எண்ணும் மையத்துக்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளர் - கன்னியாகுமரியில் பரபரப்பு!

Tamil nadu Kanyakumari Lok Sabha Election 2024
By Jiyath Jun 04, 2024 05:09 AM GMT
Report

வாக்கு எண்ணும் மையத்துக்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியான இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளர் - கன்னியாகுமரியில் பரபரப்பு! | Candidate Entered Counting Center With A Knife

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாதக மற்றும் சுயேச்சைகள் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடந்து வருகிறது. இந்த மையத்துக்குள் வாக்காளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கடும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

மக்களவை தேர்தல் முடிவுகள் - கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு!

மக்களவை தேர்தல் முடிவுகள் - கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு!

சுயேச்சை வேட்பாளர்

அப்போது பகுஜன் திராவிடர் கழகம் சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜன்சிங் (61) என்பவர் இடுப்பில் கத்தியுடன் வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலை கடந்து வந்தார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய போலீசார் உள்ளே செல்வதற்கு அவருக்கு தடை விதித்தனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளர் - கன்னியாகுமரியில் பரபரப்பு! | Candidate Entered Counting Center With A Knife

அப்போது அவர் "எங்களது சிங் சமூக மரபுப்படி எப்போதும், உறையுடன் கூடிய கத்தியை இடுப்பில் வைத்திருப்போம். அது அரசு நிகழ்ச்சி, மற்றும் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் மாற்றமில்லை. இதைப்போல் தேர்தல் நடத்தையிலும், எங்களது பாதுகாப்பு உபகரணங்களை உடலுடன் சேர்த்து அணிவதற்கான அனுமதி உள்ளது.

வடமாநிலங்களில் உள்ள சிங் வேட்பாளர்கள் இதை பின்பற்றி வருகின்றனர். ஆனால், குமரி வாக்கு எண்ணும் மையத்தில் என்னை அனுமதிக்காதது வேதனை அளிக்கிறது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.