மக்களவை தேர்தல் முடிவுகள் - கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு!
கோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை 258 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 543 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதியான இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
பின்னடைவு
இந்த தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாதக சார்பில் கலாமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கோவை தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையின்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 258 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 433 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மேலும், அதிமுக 153 வாக்குகளும், நாதக 13 வாக்குகளும் பெற்றுள்ளனர்.