🔴Live : 2024 தேர்தல் முடிவுகள் - மகுடம் யாருக்கு?

IBC Tamil Indian National Congress BJP India Lok Sabha Election 2024
By Sumathi Jun 04, 2024 04:38 AM GMT
Report

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மக்களவைத் தேர்தல்

ஒடிஸா மற்றும் ஆந்திர மாநில சட்ட மன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது.

lok sabha election 2024 result

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 250க்கும் அதிகமான இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் உடனுக்குடன் ஐபிசி தமிழ் நேரலையில்...