வாரணாசியில் மோடி பின்னடைவு - வயநாட்டில் ராகுல்காந்தி முன்னிலை
542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மோடி முன்னிலை
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவில் உள்ளார். கேரள மாநில வயநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் உள்ளார்.
விளவங்கோடு இடைத்தேர்தல்
ஒடிஸா மற்றும் ஆந்திர மாநில சட்ட மன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி 100க்கும் அதிகமான இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.