வாரணாசியில் மோடியை எதிராக களமிறங்க முடிவெடுத்த அய்யாக்கண்ணு! நீதிமன்றம் அதிரடி
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அய்யாக்கண்ணு.
அய்யாக்கண்ணு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவராக உள்ளார் அய்யாக்கண்ணு. விவசாய அமைப்புகளின் மூலம் தமிழகத்தில் கணிசமான அளவு கவனம் பெற்றுள்ள அவர், தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.
அதுவும் பிரதமர் மோடியை எதிர்த்து நேரடியாக வாரணாசியிலேயே. கடந்த 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திருச்சியில் இருந்து ரயில் மூலம் கிளம்பியவரை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்காண்ணு வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசத்தை மே 20ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் இருந்தார்.
நீதிபதிகள் அதிரடி
இச்சூழலில் தான், இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, தமிழ்நாட்டில் ஏன் போட்டியிட விரும்பவில்லை என்று வினவிய நீதிபதிகள், வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள் என்றும் கேள்வியை எழுப்பினர்.
விளம்பர நோக்கத்துடன் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.