கார் கூட சொந்தமாக இல்லை - அதிரவைக்கும் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு
பிரதமர் மோடி
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக வாரணாசி நகரில் பிரதமர் மோடி வாகன பேரணியில் ஈடுபட்ட பிறகு, தனது வேட்புமனுவை பிரதமர் மோடி இன்று தாக்கல் செய்தார். அப்போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமரின் வேட்புமனுவை முன்மொழிந்த பண்டிட் ஞானேஸ்வரர் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.
சொத்து
இந்த நிலையில், பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் இருந்து அவரின் சொத்து விவர தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, அவரின் மொத்த சொத்து ரூ. 3.02 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் அவர் வைத்துள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
