48 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரத்தில் நடந்த அதிசயம் - தமிழக அரசுக்கு மக்கள் நன்றி!

Tamil nadu Ramanathapuram
By Jiyath Dec 01, 2023 06:10 AM GMT
Report

48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் செல்லும் தண்ணீர் காரணமாக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் வரத்து

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விடாமல் கனமழை பெய்தது. பல இடங்களில் சுமார் 10 செமீ அளவிற்கு விடாமல் மழை பெய்தது. இந்நிலையில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் செல்லும் தண்ணீர் காரணமாக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

48 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரத்தில் நடந்த அதிசயம் - தமிழக அரசுக்கு மக்கள் நன்றி! | Ramanadhapuram People Thanks To Tamilnadu Govt

மேலும், சரியாக நடந்த தூர்வாரும் பணிகளால் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1975ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கிமீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது.

இதனால் வைகை நீர் தங்குதடையின்றி செல்கிறது. தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதியுதவியுடன் புதர் மண்டிக்கிடந்த இந்த கால்வாய் சீரமைக்கப்பட்டது.  

உலகின் பணக்கார இளவரசி..! அரண்மனை வாழ்க்கை, சொந்தமாக பேஷன் பிராண்ட் - சொத்துமதிப்பு..?

உலகின் பணக்கார இளவரசி..! அரண்மனை வாழ்க்கை, சொந்தமாக பேஷன் பிராண்ட் - சொத்துமதிப்பு..?

கால்வாய் சீரமைப்பு 

இந்த பணிகளால் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து 43 கி.மீ நீளமுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்களும், 45 கி.மீ நீளமுள்ள இடது பிரதான கால்வாய் மூலம் 87 கண்மாய்களும் பாசன வசதி பெற்று வருகிறது.

48 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரத்தில் நடந்த அதிசயம் - தமிழக அரசுக்கு மக்கள் நன்றி! | Ramanadhapuram People Thanks To Tamilnadu Govt

இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டதில் இருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ. 52.50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள் செய்யபட்டது.