தமிழகத்தில் புதிய வைரஸ் பாதிப்பா..? அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மர்ம வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
மர்ம காய்ச்சல் பரவலா..?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல்கள் பரவுவதாக பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரியில் மர்ம காய்ச்சல் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மா சுப்ரமணியன் தகவல்
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் கூறி, தமிழகத்தில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை என்றார்.
மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர், உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் அளித்தார்.