சமீபத்தில் திருமணம்; லிப்லாக் சீனுக்கு ஓகே தான்; ஆனால்.. ராகுல் ப்ரீத் சொன்ன கண்டிஷன்!
லிப்லாக் காட்சியில் நடிப்பது குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் பேசியுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்
தடையறத் தாக்க என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே, அயலான் ஆகிய படங்களில் நடித்தார்.
நடிகை ரகுல், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்துள்ளார்.
லிப்லாக் காட்சி
இந்த படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங்கிடம், "லிப்லாக் காட்சியில் நடிக்க கேட்டால் நடிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் "கதையை பொறுத்து இருக்கிறது, ஏற்கனவே அப்படி நடித்திருக்கிறேன். கதைக்கு பொருத்தமாக தேவையாக இருந்தால் நடிப்பேன், பப்லிசிட்டிக்காக லிப்லாக் காட்சியை வைத்தால் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.