மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
சார் படத்திலிருந்து ‘பனங்கருக்கா’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் கடந்த கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வந்தது. பின்னர் இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
பனங்கருக்கா
இந்த காதல் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிந்த காதல் ஜோடி இணைந்து பாடிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள திரைப்படம் சார். இந்த படத்திற்கு சித்து இசையமைத்துள்ளார்.
தற்போது சார் படத்திலிருந்து ‘பனங்கருக்கா’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ள இருவரும் இனைந்து பாடியுள்ள இந்த பாடலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.